ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

வேந்தர்-முதுகுடி மன்னர் முரண்பாடும் மகட்பாற்காஞ்சியும்

Paradox of Magalpaalkaanchi and king, Muthukudi King

Article Authors

Full Text

share it

Abstract (English):

Tholkappiyar has set up the Department of “Magarparkanji” as one of the twenty departments of “kanjithinai”. Tholkappiyar defines this field as a conflict between the ancient kings of the ancient kingdom and the leaders of the newly emerged empires.

Abstract (Tamil):

தொல்காப்பியர் தம் புறத்திணையியலில் காஞ்சித்திணையின் இருபது துறைகளில் ஒன்றாக ‘மகட்பாற் காஞ்சி’ என்னும் துறையை அமைத்துள்ளார். பழந்தமிழகத்தின் முதுகுடி மன்னர்களுக்கும் புதிதாக மேலெழுந்து வந்த பேரரசுகளின் வேந்தர்களுக்கும் இடையிலான போராட்ட முரணாக இத்துறையைத் தொல்காப்பியர் வரையறுக்கிறார்.

நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி

          மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்”    (தொல்.பொ.77)

முதுகுடித் தலைவன் மகளை qஅமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற பெருவிருப்புடன் படையோடு வந்த வேந்தனுக்கு மகளைத் தரமறுத்தலே மகட்பாற் காஞ்சியாகும். “ஒத்து மாறுபட்டுத் தன்மேல் வந்த வேந்தனோடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற்காஞ்சி” என்று இந்நூற்பாவுக்குப் பொருளுரைப்பார் இளம்பூரணர்.

        சங்க இலக்கியப் பனுவல்களான புறநானூற்றுப் பனுவலில் அமைந்த மகள்மறுத்தல் துறைப் பனுவல்களும் அக்கருத்தோடு தொடர்பிட்டு அமைந்துள்ள மகட்பாற் காஞ்சித் துறைப்பாடல்களும் வீரநிலைக்கால இனக்குழுத் தலைவர்களின் அதிகாரத்தையும் பண்பாட்டையும் பெரும் வல்லமையையும் நன்குணர்த்துகின்றன. இது இனக்குழு வாழ்வின் தலைமைக்கும் தனித்துவத்திற்கும் நேர்ந்த அச்சுறுத்தலா? அல்லது பேரரசு உருவாக்கத்தினால் பெரும் வேந்தர்களுக்குத் தங்களின் மகளை மணமுடித்துக் கொடுப்பதில் இனக்குழுத் தலைவர்களுள் முரண்பாடுகள் இருந்துள்ளன. அவற்றை அடையாளப்படுத்துகின்ற சங்ககாலப் புலவர்களின் பாடல்கள் சில இலக்கியங்களில் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்றன. புறநானூற்றில் 109,110,111 ஆகிய இம்மூன்று பாடல்களும் மகள் மறுத்தல் துறைப் பாடல்கள் ஆகும். இதைக் கபிலர் பாடியுள்ளார். இதற்குப் பின் வருகின்ற 336-354 வரையுள்ள பாடல்கள் மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களாகும். இதைப் 12 புலவர்கள் பாடியுள்ளனர். இவற்றுள் 354ஆம் பாடல் மகட்பாற்காஞ்சித் துறைக்குறிப்பிற்கான எந்த அடையாளத்தையும் பெறாமல் அமைந்துள்ளது. இருப்பினும் அதற்குத் துறை வகுக்கின்ற பொழுது மகட்பாற்காஞ்சி என்ற துறை வகுத்துள்ளனர். மேலும், 339,340 இவ்விரண்டு பாடல்களையும் பாடிய ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இவ்வாறு சங்க இலக்கியப் பதிகளில் இடம்பெற்றுள்ள மகட்கொடை மறுத்தல் என்று பேசப்படும்  மகள் மறுத்தல் துறை பற்றியும் மகட்பாற் காஞ்சித் துறைப்பாடல்களின் தகவல்களையும் ஆராய்கிறது இக்கட்டுரை.

Keywords

தொல்காப்பியர், மகட்பாற்காஞ்சி, வேந்தர், முதுகுடி, முரண்பாடு.

references

• மாதையன்,பெ. 2010, சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
• சோமசுந்தரனார் பொ.வெ.(உரை.) 1999, புறப்பொருள் வெண்பா மாலை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
• ராஜ்கௌதமன், 2006, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி பதிப்பகம்,சென்னை.
• பூங்குன்றன் ர., 1999, பண்டைத் தமிழகத்தில் அரசுருவாக்கம். பதிப்புத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்.
• ……………….…., 2016, தொல்குடி வேளிர் வேந்தர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

citation

No citation data found.

Sign In

Author access is disabled