ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

வாஸந்தியின் நாவலில் மரபு உடைத்தலும் உரிமை பேணலும்

Vasnthi Navalil marapu udaithalum urimai penalum

Article Authors

Full Text

share it

Abstract (English):

Vasanthi is the best writer and novelist who support feminism by strongly insisting to break the ritual restrictions which is constantly followed by our traditions. She not only the supports feminism in her novel alone and also tells the humanism. She did that revolutions and make it success too. “Kadaisivarai” novel is the example for the same.

 Writer Vasanthi tells that novel, ”Women’s are equal to men and they should be given equal status in order to release them from the bondage of slavery. Women should face and overcome boldly all the hurdles of live with strong mind, stern action and sturdy decision. In this novel the main role of Manogari’s characters was to break and change the traditional rituals. She did three thunderbolt revolutions.

She first against the father about the second marriage because she was a girl daughter and her father need son to do rituals after his death. But she Keep on fighting against this and convinced her father to accept that she can do the rituals for her father.

The another thunderbolt thing is that she put a conation to her lover that he has to stay with her in her home itself after their marriage because of her love towards his father.at least that Guy accept her wish.

The third thunder bold thing was she strongly against the killing of female childish and stopped as many such they through her strong opposition and protest.

So, she is a very great feminist who wash away all the dirty things that make the women’s to stay back in kitchen itself. She thrown a tight and create a new bath where women’s can lead her life with freedom, self respect and dignity against this male dominant society with her own leg.

Abstract (Tamil):

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப் போமென்ற

விந்தை மனிதர் தலைக விழ்ந்தார்.”

என்ற பாரதியின் பாடலுக்கேற்ப (பாரதியார் கவிதைகள்: விடுதலைக் கும்மி:ப.202) பெண்கள் சமூக வெளிக்கு வந்தாயிற்று. சுதந்திரம் கிடைத்து விட்டதாக நினைத்து சொந்தக் காலில் நிற்கத் தொடங்கி விட்டனர். பல விதங்களில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளனர் ஓரளவு. விழிப்பு உணர்வு பெற்றுள்ளனர் என்று சொல்லலாம். ஆனால் அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு இனணயான உரிமைகளைப் பெற்றுள்ளனரா? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. கல்வி, சொத்துரிமை ஆகியவற்றில் சட்டபூர்வமாக ஆண்களுக்கு இணையான பல சீர்திருத்தங்கள் முழுமையாகப் பெண்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டதா என்றால் சரியான பதில் இல்லை.பெண்களைப் பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இன்றுவரை தெளிவான புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் பெண்கள் போராடுகிறார்கள். சிந்திக்கிறார்கள். இதில் என்ன சிக்கல் என்றால் நமது சமூகத்தில் பெண்கள் ஒன்று திரண்டு ஒட்டுமொத்தமான பிரச்சனைகளைப் பற்றிப் பேச முன்வருவதில்லை. அவரவர்களுக்குப் பிரச்சனைகள் வரும்போது பேசுகிறார்கள். உலக நாடுகளில் பெண் இயக்கங்களும் போராட்டங்களும் உருவானது போல் இங்கு உருவாகவில்லை. இங்குள்ள சாதி அமைப்புகளும் அவைகளுக்கேற்ப வகுக்கப்பட்ட நெறிமுறைகளும் குடும்பம் என்ற ஒன்றில் உறைந்து வேரூன்றி விட்டது. அதிலிருந்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வெளிவர முடிவதில்லை. இவற்றை உணர்ந்த சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். பெண்ணுக்கான உரிமைகளைப் பற்றி நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் நாவல்கள் தம் பங்குக்கு நிறையத் தொண்டாற்றியுள்ளன.

Keywords

வாஸந்தி, நாவல், மரபு, உடைத்தல், உரிமை பேணல்

references

No reference data found.

citation

No citation data found.

Sign In

Author access is disabled