The paper to reviews of the works of Dr. N.Nalini devi, at the point of view her multidimension and creative personality. She was make her research works on basis of Tamilology and feminism that were treated like her eyes and published many books in construct of theoretical like sociology and poetical aesthetic etc.
மதுரை மண்ணைச் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர் சங்கத் தமிழில் ஆய்ந்த தோய்ந்த ஆழ்ந்த உழைப்பும் தீவிரத் தேடுதலும் இவர் எழுத்துகளில் தென்படுகின்றன. இவரது சிந்தனையால் தமிழின் வீரமும், ஈரமும் மணக்கின்றன. பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தலைமேல் தாங்கிப் பெருமித நடைபோடு பவர். தன் எழுத்துகளையே ஆயுதமாகக் கொண்டு களமாடுவர்.” (வைரமுத்து, பக்: 4-5)
“காட்டாற்று வெள்ளமாய்க் கவிதை கரை புரண்டோடுகிற மொழியான நம் தமிழின் மேன்மையை நாளும் பொழுதும் தொழுது வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பவர்.” (கவிஞர் சென்னிமலை தண்டபாணி பக்: 6-7)
“என்னைப் பொருத்தவரை கட்டுரை எழுதுவதில் எனக்குள் எந்தத் தடையும் இல்லை. கட்டுரை மட்டும்தான் தங்கு தடையில்லாமல் என்னால் எழுத முடியும். கட்டுரை எழுதிய கையோடு ஒரு கவிதை எழுதவோ, நாடக இலக்கியம் போலப் படைப்பதோ எனக்குச் சாத்தியமில்லை. என்னுடைய ஆளுமையில் இத்தகைய பண்பு இல்லை. ஆனால், கட்டுரை எழுதிய கையோடு அவரால் நாடகம் படைக்க முடியும். சிறுகதை எழுதுவதும் அவருக்குச் சாத்தியம். பன்முகப்பார்வை கொண்டது அவரது ஆளுமை” (ஞானி,நூல் அணிந்துரை).
எனும் பல சான்றோர்களின் புக ழுரைகளுக்கு உரியவரான பேராசிரியர் முனைவர் நா.நளினிதேவி தமிழியத்தையும், பெண்ணியத்தையும் இரு கண்களாய்க் கொண்டவர். தனக்கெனக் காணலாகும் தனித்துவத்தைத் தம் படைப்புகளின் வழி உலகறியச் செய்து கொண்டிருப்பவர். அடுத்தடுத்த இழப்புகளினால் நொறுங்கிப் போன எனக்கு மனமாற்றானது ஆண்டிராய்டு ‘அலைபேசி’ என்று கூறும் இவர், தனிமையில் திணறிய எனக்கு முக நூல் நாட்களுடன் புதிய உலகம் காண இதுவே வடிகால் ஆனது என்று இன்றைய தொழில் நுட்பம் தனக்கும் தன் தமிழுக்கும் உறுதுணையானதைக் குறிப்பிடுகிறார்.
1. நா. நளினிதேவி, முகநூல் பதிவு (20.01. 2019).
2. நா. நளினிதேவி, புலனப் பதிவுத் தகவல் (21.01.2019).
3. நா. நளினிதேவி ‘கவிஞர் வைர முத்துவின் வாழ்த்துரை, ’என் விளக்கில் உன் இருள், ஓவியா பதிப்பகம், வத்தலக் குண்டு, 2019.
4. மேலது., ‘கவிஞர் சென்னிமலை தண்ட பாணியின் அணிந்துரை’
5. நா. நளினிதேவி, கோவை ஞானியின் அணிந்துரை’,காதல் வள்ளுவன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை. 2019.
முனைவர் நா.நளினிதேவியின் படைப்புகள்
1. ராஜம் கிருஷ்ணனின் புதினங்களில் (15) சமுதாய மாற்றம். (சமுதாய இயல் கோட்பாடுகளின் அடிப்படையில்) மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1991.
2. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம், ஏகலைவன் பதிப்பகம், சென்னை, 2001.
3. தமிழ் இலக்கியம் மரபும், புதுமையும், காவ்யா பதிப்பகம், சென்னை.
4. தமிழ் இலக்கிய வரலாறு, (படைப் பிலக்கியப் பார்வை) காவ்யா பதிப்பகம், சென்னை, 2012.
5.இலக்கியப் போராளி, எஸ்.பொ. (ஈழப் படைப்பாளர்), படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும் (50-க்கும் மேற்பட்ட நூல்கள்) காவ்யா பதிப்பகம், சென்னை, 2018.
6. மார்க்சியத் தமிழறிஞர் கோவை ஞானியின் கவிதையியல் கொள்கை (அவருடைய 780 பக்க நூலில் இருந்து) புதுப்புனல் பதிப்பகம், சென்னை.
7. நட்பிற் பெருந்தக்க யாவுள (மடல் இலக்கியம்) புதுப்புனல் பதிப்பகம், சென்னை, 2016
8. நெஞ்சக் கதவை மெல்லத் திறந்து’ (தன் வரலாற்றுப் புதினம்) புதுப்புனல் பதிப்பகம், 2016.
9. புறநானூறு தமிழரின் பேரிலக்கியம், புதுப்புனல் பதிப்பகம், 2018.
10. என் விளக்கில் உன் இருள் (கவிதை) ஓவியா பதிப்பகம், வத்தலக்குண்டு, 2019.
11. காதல் வள்ளுவன் (உரை ஓவியம்) டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, 2019.
12. அகவிடுதலையே பெண் விடுதலை, கைத்தடிப் பதிப்பகம், சென்னை.2019
13. நானும் என் தமிழும், தமிழ் நேயம், கோவை, 2001