Poets play a significant role in the new creation of Literature. Many Tamil poets have contributed for the new creation of Tamil literature. Mudukulathur Sarvana perumal kavirayars Literary works were written before hundred years. During his period chitrilakkiyam reached the target milestone. So his works are considered in the form of chitrilakkiyam. He belongs to the period of saiva’s. His speciality of writings known for his humour and imagination. He is one of the major disciples of king muthuramalinga sethupathi kingdom.
He had a divine power of singing poems like poet kalamega puzhavar. He is known for expressing his ideas with the rhyming words by following regular grammar. He was very bold and fearless. He is a way of expressing his eight books and single poems were unable to find. But his works were traced in some of others literary works. This paper is prepared by using those available resources.
இலக்கியங்கள் உருவெடுப்பதில் புலவர் பெருமக்களுக்கு நெடிய பங்குண்டு. பலநூறு புலவர் பெருமக்களின் மதிநுட்பத்தின்பொருட்டு உருவானவையே தமிழ் இலக்கியங்கள் என்று கூறினால் அது மிகையாகா. அவ்வகையில், முதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயரின் இலக்கியங்கள் சில நூற்றாண்டுகளைக் கடந்தவை. இவரது காலத்தில் சிற்றிலக்கியங்கள் வேரூன்றி வளர்ச்சியின் எல்லையை அடைந்தவை. ஆக இவரது படைப்புகள் சிற்றிலக்கியங்களாகவே அமைகின்றன. இவரைப் பற்றியும் இவரது கவித்திறமை பற்றியும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை விளங்கும்.