” Unitarian kelir ‘tamilartam the heart , alive and rich combination of sophistication. It is a natural characteristic of Tamils to treat those who are unfamiliar with them as a relative. This is characteristic of all those born in Tamil soil. This , hospitality valivakuttatenalam. The word ‘feast’ has special meanings such as ‘novelty’ , ‘ new arrival’ and ‘ new arrival’. ‘Hospitality’ is the hospitality of a stranger. Much of this can be found in the ‘Malappadukadam’ book. Panar , patiniyar , kuttar , viraliyar and passerby mutalanorait much free to assume their uravinarakak welcoming hospitality , and other literature to be found in the hospitality ‘malaipatukatam’ can be seen in detail in the book. In the ‘hillpadukkadam’ book, it is clearly seen that the Vandar welcomed the food and enjoyed the treat.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும். முன்பின் அறிமுகமாகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும். தமிழ்மண்ணில் பிறந்த அனைவர்க்கும் இது பண்பாகவே பதிந்து விட்டது. இதுவே, விருந்தோம்பலுக்கு வழிவகுத்ததெனலாம். ‘விருந்து’ என்ற சொல்லுக்கு ‘புதுமை’, ‘புதிய வரவு’, ‘புதிய வருகை’ என்ற சிறப்புப் பொருள்கள் உண்டு. முன்பின் தெரியாதவர்களை இன்முகங்காட்டி வரவேற்று உபசரிப்பது ‘விருந்தோம்பல்’ எனப்படும். இதனை மிகுதியாகவே ‘மலைபடுகடாம்’ நூலில் காண முடிகிறது. பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் மற்றும் வழிப்போக்கர் முதலானோரைத் தத்தம் உறவினராகக் கருதி இனிதாய் வரவேற்று உபசரிப்பதை, பிற இலக்கியங்களில் காணமுடியா விருந்தோம்பலை ‘மலைபடுகடாம்’ எனும் நூலில் விரிவாகக் காணமுடிகிறது. வந்தாரை வரவேற்றுத் தத்தம் சக்திக்கேற்ப உணவு பரிமாறி உபசரித்து மகிழ்ந்த நிலையை ‘மலைபடுகடாம்’ நூலில் தெளிவாகக் காண முடிகிறது.