This essay studies to find about how medical science violate medical ethics and its possibility. In our society, we can see more medical ethics. Some time which are accept by some person. But some time it is not accept in many situation. So the philosophy is covered this problems and give some solution. This paper aims to point out argument of medical ethics.
இவ்வுலகில் பிறந்து வாழ்கின்ற ஒவ்வொருவரது எதிர்பார்ப்பும் தத்தமது வாழ்வைச் சிறப்புற அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். அவ்வகையில் மனிதன் வாழ்வதற்கான வழிபற்றிக் கூறும் துறையாகவே ஒழுக்கவியல் காணப்படுகின்றது. ஒழுக்கவியலானது சர்வ உலகு பற்றிய தேடலான மெய்பொருளியலின் பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். அழகியல், அறிவாராய்ச்சியியல், பௌதீக அதீதம், ஒழுக்கவியல் ஆகியனவே மெய்யியல் ஆய்வு செய்யும் பிரதான துறைகளாகும். இவற்றுள் ஒழுக்கவியல் தனிச்சிறப்புப் பெற்றுக் காணப்படுகின்றது. மனித வாழ்வின் இயல்புகளைப் பற்றியும் பிரச்சினைகளைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கிய போதே ஒழுக்கவியல் சார்ந்த பிரச்சினைகளும் தோன்றின எனலாம். தான் எவ்வாறு வாழ்க்கை நடத்த வேண்டும்? நன்மையை அனுசரித்து செயற்பட வேண்டுமா? அல்லது எக் காரணத்திற்காக நன்மையை அனுசரித்துச் செயற்பட வேண்டும்? என்ற கேள்வி மனதில் எழுந்த போதே ஒழுக்கவியல் பிரச்சினைகளும் வளர்ச்சி பெற்றன எனலாம்.