All the folk songs are depending their situations only. But Thallattu is recites relationship in mother and the child. Its analysis so city psychology. In this article describes what happens and role of Thallattu in the society.
நாட்டுப்புறப் பாடல்கள் கிராமத்து மக்களால் நீண்டகாலமாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருபவையாகும். இப்பாடல்களைப் பாடியவர் யாரென்றோ, தோன்றிய காலம் எதுவேன்றோ அறிந்து கொள்ள முடியாததாக உள்ளது. மனதை மயக்கும் இவ்விசைப் பாடல்கள் எளிமையாகவும் இனிமையாகவும், கற்பனை வளமும், கவிநயமும் பொதிந்தனவாக அமைந்திருக்கும். இயற்கை அன்னை தன்னை முகம் பார்க்கத் தேர்ந்தேடுத்த தெளிவான கண்ணாடியாக இவை அமைந்திருப்பதோடு, ஏட்டில் எழுதாத கவிகளாக வலம் வருகின்றன. நாட்டார் பாடல்களில் ஓசை ஓங்கியிருக்கும், உணர்ச்சி வெளிப்பட்டிருக்கும், தொடை நயங்கள் சொற்களில் ஒளிந்திருக்கும். எனினும் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும் என்பதனை மறுப்பாரிலர். மனிதனின் வாழ்வியல் அம்சங்களோடு இணைந்ததாக வெளிப்படும் நாட்டார் பாடல்களைத் தாலாட்டுப்பாடல், விளையாட்டுப்பாடல், காதற்பாடல், தொழிற்பாடல், சமய நிலைசார் பாடல், ஒப்பாரிப் பாடல் என பொதுவாகப் பிரித்து வகைப்படுத்தினாலும், தாலாட்டுப் பாடலுக்கு மட்டும் தனி மகிமை உண்டு எனலாம்.