Man mukkunankal the utpattavan is . It catvikam , iracacam and Thomas co healed . The Vedas speak clearly about Param and Ego . The Barada continent camayamana Hindu religion based on the passed . Trio ion , Ari , Aran, the trio mukkunankal the symbol displays have been . In avaitan ion -Violent recovery ( Creation ) Ari iracaca recovery ( protection ), Aran, Thomas co- value ( destruction ) expression are . Ivatippataik qualities with the Mahabharata , featuring the main character Vidura’s pattirappataippai study ivvayvuk article is intended .
மனிதன் முக்குணங்களுக்கு உட்பட்டவன் ஆவான். அது சாத்வீகம், இராசசம் மற்றும் தாமச குணமாகும்.வேதங்கள் பரம் மற்றும் இகத்தைப் பற்றிப் தெளிவாகப் பேசுகின்றன. அவை பரத கண்டத்தின் சமயமான இந்து சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். மும்மூர்த்திகளான அயன், அரி, அரன் ஆகிய மூவரும் முக்குணங்களின் அடையாளமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அவைதனில் அயன் சாத்வீக குணமாகவும் (படைத்தல்) அரி இராசச குணமாகவும் (காத்தல்) அரன் தாமச குணத்தின் (அழித்தல்) வெளிப்பாடாகவும் உள்ளனர். இவ்அடிப்படைக் குணங்களைக் கொண்டு மகாபாரதத்தில் இடம்பெறும் முதன்மை கதாபாத்திரமான விதுரரின் பாத்திரப்படைப்பை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.