The milk is full of cruelty and misery . In ippalainilat living ahrinai beings through the poets of human life, the essential element of love psychology aimed to portray shown . Such love is the leader headed in life how to match up is the fact that the article explain seeks . Elephants , squirrels , deer , dove , lizard etc. ahrinai uyirkalvali anpuru views displays wins a lizard named ahrinai life in this article is largely spoken .
கொடுமையும் துயரமும் நிறைந்தது பாலை. இப்பாலைநிலத்தில் வாழும் அஃறிணை உயிர்களின் வழியே புலவர்கள் மனித வாழ்வின் இன்றியமையாக் கூறான அன்பை உளவியல் நோக்கில் சித்திரித்துக் காட்டியுள்ளனர். அத்தகைய அன்பு தலைவன் தலைவியர் வாழ்வில் எவ்விதம் பொருந்தி உள்ளது என்பதை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது. யானை, அணில், மான், புறா, பல்லி முதலான அஃறிணை உயிர்கள்வழி அன்புறு காட்சிகள் காட்சிப்படுத்தப் பெற்றாலும் பல்லி என்ற அஃறிணை உயிரே இக்கட்டுரையில் பெரிதும் பேசப்படுகிறது.