What is the basis of the food economy of paanar. Music, singing and singing is a profession of fashion. They do not produce food for themselves. They spend their entire lives playing music. They praise the ruler of the country, sing his talents and sing their gifts and fulfill their food needs. They share their wealth without having to pay for themselves. Trafficking in the poverty of paanar is inherited by the king and the donor of the rich. It is the duty of the king to protect the country and to protect the citizens. It is a political tradition to enrich the lives of the people who seek it and enrich their lives and lives.
பாணர்களின் உணவு பொருளாதாரம் எதை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. இசைத்தலும், பாடல் பாடி, பண் அமைத்தலும் பாணர்களின் தொழிலாகும். தாமாக முயன்று தங்களுக்குத் தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. முழுநேரத்தையும் இசைக்காகவே செலவழிக்கின்றனர். நாட்டை ஆளும் அரசனை புகழ்ந்து அவனுடை ஆற்றல்களை பாடலாகப் பாடி பரிசுகளை பெற்று தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். கொடையாகப் பெற்ற பெரும் செல்வத்தை தமக்கென முழுவதும் வைத்துக் கொள்ளாமல் தம் சுற்றத்துடன் பகிர்ந்து வாழ்கின்றனர். பாணர்களின் வறுமையைப் போக்குவது அரசர் மற்றும் வள்ளல்களின் கொடை மரபுபாகிறது. நாட்டை காப்பதும் குடிமக்களை தம் கண்போல் காப்பதும் அரசனின் கடமையாகிறது. இதில் தன்னை நாடிவரும் மக்களின் குறைகளைக் களைந்து அவர்களின் வளத்தையும் வாழ்வையும் செம்மையாக்குவது அரசியல் மரபாகும்.