British colonial rule as a result of the social changes of the background originating print device output forms, either ‘ book ‘ of the Tamil social and cultural history of the entire discussion document and are in effect limited . The printed nulkalinvali knowledge base public to disseminate tried alumaikalul noted Wu . Way . Saminathiyar ( p . Saravanan , Swaminathan , 2015). Ivaraipponre arumukanavalar , c . Keep it up . Damodaram Pillai , Pinnathur a . Narayanaswamy Iyer, such as some ettuccuvatikal the touched Ancient Tamil books kakitappirati to the throne lit uyirkotuttu documented .
So documenting the Ancient Tamil texts yet again marginalized lives fighting . Not looking for antiquated texts that have been thrown to the brink ; In due course come back the computer to upload to . So doing future generations tamalmoli’s special about the Norwegian’s Antiquities of the easily ascertain able .
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று ‘புத்தகம்’ தமிழ்ச் சமுகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே.சாமிநாதையர் (ப.சரவணன், சுவாமிநாதம், 2015). இவரைப்போன்றே ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் போன்ற சிலர் ஏட்டுச்சுவடிகளில் தவழ்ந்த பழந்தமிழ் நூல்களைக் காகிதப்பிரதிக்கு அரியனை ஏற்றி உயிர்கொடுத்து ஆவணப்படுத்தினர்.
அவ்வாறு ஆவணப்படுத்திய பழந்தமிழ் நூல்கள் இன்று மீண்டும் விளிம்புநிலையில் உயிருக்குப் போராடுகின்றன. இவ்வாறு விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பழந்தமிழ் நூல்களைத் தேடிக்கொணா;ந்து சாகாவரம் பெற்ற கணினியில் பதிவேற்றம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால்தான் இனிவரும் தலைமுறையினர் தமழ்மொழியின் சிறப்புப் பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.