Sangam literature consists of two elements the Agam and Puram. Agam life speaks of love, Puram life is about heroism, discipline, and education. The “hospitality” characteristic of the purananooru is coherent with the life of the ancient Arabs and is examined here. The “hospitality” attribute is explored in detail by evidence from the purananooru and the Diwan-ul-Hamasa.
தமிழ் இலக்கியம் தமிழர்தம் வாழ்வுதனை அக வாழ்க்கை என்றும் புற வாழ்க்கை என்றும் இருகூறாகப் பிரித்துக் கூறுகின்றது. அக வாழ்க்கை என்பது காதல் மற்றும் இல்லற வாழ்க்கையினைப் பற்றியது. புறவாழ்க்கை என்பது வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவற்றைப் பற்றியது.
புறப் பண்புகளில் வீரம், கொடை போன்ற நற்பண்புகள் மட்டுமின்றி ”விருந்தோம்பல்” என்ற மையப் புள்ளியில் இருவேறு தொலைதூரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பழந்தமிழரும், பண்டைக்கால அரேபியரும் பெருமளவில் ஒத்துப் போகிறார்கள் என்பது கலாச்சார வரலாற்றில் ஒரு விந்தை என்றால் அது மிகையல்ல.
இந்த வரலாற்று விந்தையை, அவ்விரு மொழிகளின் இலக்கிய நூல்களான புறநானூறு மற்றும் தீவானுல் ஹமாசா ஆகியவற்றிலிருந்து பெற்ற சான்றுகள் மூலமாக மெய்ப்பித்து நிறுவ முயல்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
1. புறநானூறு: மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், 2010, சாரதா பதிப்பகம், சென்னை.
2. திருக்குறள் தெளிவுரை, மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார், 2006, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. உள்ளமும் உயர் நூல்களும், திரு. வி.க. 1989 , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
4. المرزوقي، أبو ّ علي أحمد بن ّ محمد بن الحسن، شرح ديوان الحماسة، نشره أحمد أمين وعبدّ السلام هارون،1411هـ
5. الأعشى الكبير، الديوان، شرح وتعليق محمد محمد حسين،1983م، بيروت.
6. الطائي، يحيى بن مدرك، ديوان شعر حاتم بن عبد االله الطّائي وأخباره، رواية هشام بن ّ محمد ّ الكلبي، دراسة وتحقيق عادل سليمان جمال، د.ت، مطبعة المدني، القاهرة