Classic literature , one , ten , Ettutokai Sangam poets of the kavikkotai by , ancient Tamils’ traditional values emphasized . Our Tamils ulavuttolilaik the world feeding line , socio- economic development were also found highlighted that in order to ‘ pattuppat the palantamilar the tolircirappu ‘ the topic under analysis , palantamilar literature in agriculture ‘ Rice ‘ ( grain ) vital crop itamperuvataic pointer , Rice’s need , privilege Ed The purpose of this article is to explain
செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்கப் புலவர்களின் கவிக்கொடையால், பண்டைத் தமிழர்களின் மரபுசார்ந்த விழுமியங்களை எடுத்தியம்புகின்றன. நம் தமிழர்கள் உழவுத்தொழிலைக் கொண்டு உலகுக்கு உணவளித்ததோடு, சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலினர் என்பதனை உயர்த்திக் கூறும் நோக்கில், ‘பத்துப்பாட்டில் பழந்தமிழரின் தொழிற்சிறப்பு’ என்னும் தலைப்பின் கீழ் ஆய்ந்து, பழந்தமிழர் இலக்கியத்தில் பயிர்த்தொழிலில் ‘நெல்’ (தானியம்) இன்றியமையாதப் பயிராக இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டி, நெல்லின் தேவையையும், சிறப்பையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.