The paper to review the redactions and publications of the naṟṟiṇai one of the eight anthologies of the ancient cankam literature. The editors that they how to read and bibliography of this work in the years between from 1914 to 2019.
18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 19-ஆம் நூற்றாண்டின் மையம் வரையிலான காலப்பகுதியினைத் தமிழ்ச்செவ்வியல் பனுவல்களின் முதற்பதிப்புக் காலக்கட்டம் எனலாம். ஓலைச்சுவடிகள், அரியகையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுப் பதிப்பாக்கம் பெற்ற சங்கப்பனுவல்கள் உரையாக்கம் என்ற விரிவான தளத்திற்கு நகர்ந்த பொழுது பரந்துபட்ட வாசிப்பிற்கும் சமூக, சமயப் பார்வைக்கும் உட்படுத்தப்பட்டு பல்வேறு ஆக்கங்களாக வெளிவந்தன. இவ்வாக்கங்கள் புலவனின் படைப்பாக்கக் காலக் கருத்தியலில் முழுமையாக ஒன்றியமைந்திருந்தது எனக் கூறவியலாது. உரையாசிரியர்கள்தம் புலமையின்பாற்பட்ட தற்சார்பு நிலையிலும் அவர்கள் இயங்கிவந்த சமூக, சமய, அரசியல் நிறுவனப் பின்புலங்களிலும் பதிப்பித்து வெளியிடப் பெற்றன. இவ்வேறுபாடுகள் ஒருபுறமிருக்க முதற்பதிப்புக் காலக்கட்டத்திலும் அதற்குப்பிறகும் குறிப்பிட்ட ஒரு நூலுக்கான பல சுவடிகள், பிரதிகள் ஆங்காங்குச் சேகரிக்கப் பெற்றமையினால் பதிப்பாசிரியர்கள் அவற்றை மறுபதிப்பாக்கம் செய்த பொழுது பதிப்புகளில் பொருத்தமற்ற பாடங்கள் பிரதிபேதங்களாகத் தொடர்ந்து குறிக்கப்பெற்று வந்தன. சில பதிப்பாசிரியர்கள் முதற்பதிப்புக் காலக்கட்டத்திற்குப் பிறகான புதிய சுவடிகள், பிரதிகளின் வரவினால் குறிப்பிட்ட நூலுக்குப் புதிய பதிப்பினைச் செய்தனர்.
மேற்குறித்த நிலையில் எட்டுத்தொகை நூலான நற்றிணைக்கு எழுந்துள்ள பதிப்புகளையும் வெளியீடுகளையும் அடைவுபடுத்தி 19-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள் நற்றிணையினை எவ்வாறு பதிப்பித்தும் வாசித்தும் அடைவு படுத்தியுள்ளனர் என ஆய்வுசெய்யும் முகமாக இவ்வுரை அமைகின்றது. இவ்வாய்விற்கு 1914-இல் இருந்து 2020 வரை வெளிவந்துள்ள நற்றிணைப் பதிப்புகளும் வெளியீட்டு நூல்களும் எடுத்துக்கொள்ளப் பெறுகின்றன.
அமிர்தலிங்கம் சு.,சங்க இலக்கியக்களஞ்சியம்,மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்,2000.
ஆறுமுகம் ப.,பாட்டும் தொகையும் என் உரை, ஸ்ரீநிதி பதிப்பகம்,திருச்சிராப்பள்ளி,2010.
இராமையா பிள்ளை நா., நற்றிணை மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம்,சென்னை,1999.
ஈவா வில்டன், நற்றிணை (Annoted Translation vol.,I,II,III),தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2008.
கந்தசாமி நீ., NARRINAI Text and Translation, பிரெஞ்சுஆய்வுநிறுவனம், பாண்டிச்சேரி, 2008.
கோவிந்தன் கா.,நற்றிணை,மலர் நிலையம்,சென்னை,1956.
சஞ்சீவி ந.,சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்,சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை,1973.
சண்முகம்பிள்ளை மு.,சங்க இலக்கியம் பாட்டும் தொகையும்,பாரிநிலையம், சென்னை,1967.
சுப்பிரமணியன் ஏ.வி., NARRINAI (An Anthology Of Amour),தமிழ்ப்பல்கலைக் கழகம்,(Department of Development-Culture),தஞ்சாவூர்,1989.
சுப்பிரமணியன் ச.வே., நற்றிணை தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம்,சென்னை,2009.
சுப்பிரமணியன் ச.வே.,சங்க இலக்கியங்கள்,மணிவாசகர் பதிப்பகம்,சென்னை, 2006.
சுப்பிரமணியன் ச.வே.,தமிழ்ச்செவ்வியல் நூல்கள்,மணிவாசகர் பதிப்பகம்,சென்னை, 2008.
சுப்பிரமணியன் ச.வே.,நற்றிணை மூலமும் உரையும்,மணிவாசகர் பதிப்பகம்,சென்னை, 2009.
தமிழ்வாணன் லேனா.,நற்றிணை,மணிமேகலை பிரசுரம்,சென்னை,1989.
துரைசாமிப்பிள்ளை சு., நற்றிணை மூலமும் விளக்கவுரையும், அருணா பப்ளிகேஷன்ஸ் , சென்னை, 1966.
தெட்சிணாமூர்த்தி அ.,The Natrinai Four Hundred,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2001.
நாராயணசாமி ஐயர் அ., எட்டுத்தொகையுளொன்றாகிய நற்றிணை , சைவவித்யா நுபாலனயந்திரசாலை, சென்னை, 1915.
நாராயணசாமி ஐயர் அ., நற்றிணை மூலமும் உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1952.
நாராயணசாமி ஐயர் அ., நற்றிணை மூலமும் உரையும், பொ.வே.சோ. இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1965.
பசுபதி ம.வே., தமிழ்ச்செவ்வியல் நூல்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 2010.
பரமசிவம் த.கோ., நற்றிணை மூலமும் உரையும் (எடுத்துக்காட்டுப் படிவம்), ஓலைச்சுவடிப்புலம், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
பரமசிவன் மா., அகநானூற்றுப் பதிப்புப் பின்புலம், காவ்யா பதிப்பகம், சென்னை, 2012,
பழனியப்பன் வெ., தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 1956.
பாலசுப்பிரமணியன் கு.வெ., நற்றிணை மூலமும் உரையும், நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2004.
பாலாஜி க., நற்றிணைப் பதிப்பு வரலாறு, காவ்யா பதிப்பகம், சென்னை, 2010.
பாலையன் அ.ப., நற்றிணை மூலமும் உரையும், சாரதாபதிப்பகம், சென்னை,2009.
பிரபாகரபாபு.,நற்றிணை மூலமும் உரையும்,தமிழ்க்கவிப் பதிப்பகம், சென்னை,2019.
புலியூர்க்கேசிகன், நற்றிணை ,பாரிநிலையம்,சென்னை, 1967.
பெருமாள் முதலியார் மு.ரா.,இன்றைய சொற்களில் அன்றைய நற்றிணை,பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை,1986.
மகாதேவன் கதிர், நற்றிணை மூலமும் உரையும்,கோவிலூர் மடாலயம், 2003.
மாதையன் பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 2007.
ராஜம் சாக்கை மர்ரே,நற்றிணை,மர்ரே அண்ட் கம்பெனி, சென்னை, 1957.
விசாலாட்சி ந.,பழந்தமிழ்ப்பதிப்புகள்,சரஸ்வதி பதிப்பகம்,சென்னை,1990.
விநாயகமூர்த்தி அ.,மூலபாடஆய்வியல்,பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,மதுரை, 1995.
வேங்கடராமன் எச்., நற்றிணை மூலமும் உரையும், உ.வே.சா. நூல் நிலையம், பெசன்ட் நகர் சென்னை, 1989.
வைதேகி ஹெர்பர்ட், Natrinai:Translation in English with Meaning,கொன்றைப் பதிப்பகம், சென்னை, 2013.
ஜெகத்ரட்சகன் எஸ்.,நற்றிணை, ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, 2017.