ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தொல்தமிழரின் அறிவியல் கொடை: இரும்பும் எஃகும்

Tholthamizharin Ariviyal kodai : Irumbum Ekkum

Article Authors

Full Text

share it

Abstract (English):

It seems strange to note that unlike in other parts of peninsular India, there is no copper age in ancient Tamilnadu but at the same time there is an advent of Iron age immediately at the end of stone age culture. Further it is a matter of debate how this transition could have occurred when the counter parts of the India were unaware of it. Unlike other metals like gold and silver, iron needs some metallurgical operations to extract the same from its ores.

From the classical works of Sangam age, we are able to understand the spectacular achievements of excellence in working with iron by skilled metal workers. The literature points out to the terms like, irumbu (Akam.4:3-4; Natri.249:1; Puram.345:8-9), Kollan (Perumpanatru.206-208), Karungai kollan (Puram.170:17), Ulaikodam (Puram.170:17), Ulai (Kuruntho.172:4-6), Ulaikkal (Kuruth.12:2; Puram.170:15-17), Turuti (Natri.124:4, Manimek.2:43), Kuradu (Kuruntho.4), Kuruku (Akam.202:5-8). These terms, which gives, an insight into the admiral qualitative as well as quantitative workmanship of the artisans of the classical age.

Literary evidences are well supported with the artefacts unearthed during excavations. This article aims in focusing on elucidating iron culture during Sangam age.

Abstract (Tamil):

மனித நாகரிக வாழ்வின் தொடக்கத்திற்கும் பின்னர் அவர்தம் பொருளாதார மேம்பாட்டிற்கும் அடிகோலியது இரும்பு உலோகமே எனில் அது மிகையன்று. ஆனால் இரும்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒரு காலமும் இருந்தது. அது ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். இரும்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலமாக உணவு வேட்டைக்குரிய கருவிகள் தயாரித்தலும் வேளாண் கருவிகள் தயாரித்தலும் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்வதற்கான படைக்கருவிகள் தயாரித்தலும் உருவாகின.

வேட்டைச்சமூகம் வேளாண் சமூகமாகப் பரிணமித்தலில் இரும்பு உலோகத்தின் பங்கு மிகுதி. எனவே இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனமே நாகரிகத்தின் முன்னோடி எனச் சிறப்பாகச் சுட்டலாம். தொல்தமிழர்கள் இரும்பை உருக்கித் தயாரித்தலிலும் எஃகு தயாரித்தலிலும் உலகில் உள்ள ஏனைய இனங்களைவிட முன்னோடியாகவே இருந்துள்ளனர். ஏனெனில் உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் புதிய கற்காலத்தினைத் தொடர்ந்து செம்புக் காலம், வெண்கலக் காலம் என பிற உலோகங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் ஏறத்தாழ இதே காலகட்டத்திலேயே தொல்தமிழர்கள் இரும்பு உலோகத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுணர்ந்து இரும்பாலாகிய பலவகைப் பொருள்களைத் தயாரித்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே வையத்து மக்களுக்கெல்லாம் தமிழர்கள் வழங்கிய அறிவியல்-தொழில்நுட்பக் கொடையென இரும்பு-எஃகு உலோகத் தயாரிப்பை உறுதியாகக் குறிப்பிடலாம்.

Keywords

Karungai kollan (Puram.170:17), Ulaikodam (Puram.170:17), Ulai (Kuruntho.172:4-6), Ulaikkal (Kuruth.12:2; Puram.170:15-17), Turuti (Natri.124:4, Manimek.2:43), Kuradu (Kuruntho.4), Kuruku (Akam.202:5-8)

references

இராகவன் அ., 2007, ஆதிச்சநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், அமிழ்தம் வெளியீடு, சென்னை.
சரவணன் ச., 1967, சேலத்து இரும்பு, விசாலாட்சி பதிப்பகம், சென்னை.
சிற்றம்பலம் சி., 1991, பண்டைய தமிழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
செயபால் இரா.(உரை), 2011, அகநானூறு (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.
Charkrabarti D.K., and N.Lahiri, 1994, The Iron Age in India: The beginning and consequences, Puratattva, 24:12-32.
Heath J.M., 1839, On Indian Iron and Steel, Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland.
Rajan K., 1991, Archaeology of Dharmapuri District, Tamilnadu, Man and Environment XVI (1):37-52.
…………, 1994, Archaeology of Tamilnadu (Kongu country), Book India Publishing Co., New Delhi.
Rea Alexander 1998 (Reprint), Catalogue of the Pre-historic Antiquities from Adichanallur and Perumbair, Government Museum, Madras.
Sasisekaran B., and B.Raghunatharao, 1999, Technology of Iron and steel in Kodumanal – An ancient industrial centre in Tamil Nadu, Indian Journal of History of Science, 34(4):263-272.
Sasisekaran B., 2002, Metallugy and Metal Industry in ancient Tamilnadu – An archaeological study, Indian Journal of History of Science, 34 (1):17-19.
Sasisekaran B., et al., 2010, Adhichanallur: A Prehistoric mining site, Indian Journal of History of Science, 45(3):369-394.
Tylecote R., 1980, Furnaces Crucibles and slags, In: Coming of the age of iron (Wertime et al., Ed), Yale University, New Haven pp:183-228.

citation

No citation data found.

Sign In

Author access is disabled