Tolkappiyandan is the oldest of all the existing grammars . Some Tamil scholars have claimed that Tolkappiyar was the forerunner of the pioneering work of the Vedic language . The main reason for this policy is Tolkapp Student with Bear utankarra orucalai panamparanar tolkappiya aintirat vallavaravar in the kurittullamaiyeyakum. Tindakhapian, a five-foot-tall tomb, is a foot of Panambaranar’s composition. They believe that the five-legged ritual was pre-eminent and that it had become obsolete after the emergence of fashion . Tolkappiyanar kalattup paniniyam ulatayirukkumel , Tholkappiar itself LearnedWould have excelled in this. These scholars assert that he lived before Panini, without calling him a learned learner.
இப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய முக்கியக் காரணம் தொல்காப்பியரோடு உடன்கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் தொல்காப்பியரை ஐந்திரத்தில் வல்லவராவார் எனக் குறித்துள்ளமையேயாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில் வரும் ஓர் அடி. ஐந்திர வியாகரணம் பாணினீயத்திற்கு முற்பட்டதென்றும் பாணினீயம் தோன்றியபின் வழக்கொழிந்து விட்டதென்றும் இவர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியனார் காலத்துப் பாணினீயம் உளதாயிருக்குமேல், தொல்காப்பியர் அதனையே கற்று இதில் சிறந்து விளங்கியிருப்பார். பாணினீயம் கற்று வல்லவர் என்று அவரைக் கூறாமையினாலே அவர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்று இந்த அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள்.