Tolkappiyanar is a pre-historic era
In the great war between the Pandavas and the centenary, the two warriors helped the Tamil King and the great King of Tamil Nadu as much as possible. A song by Muranjiyur Mudinagarayar, a scholarly greeting, has been compiled and the first compilation of a greeting from God.
தொல்காப்பியனார் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது
பாண்டவர்க்கும் நூற்றுவர்க்குமிடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்துப் படைவீரர்களுக்கும் உதியஞ்சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் அப்பெரும்போர் முடியுமளவும் பெருஞ்சோறு கொடுத்து உதவினன். முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் இவ்வேந்தனை முன்னிலைப்படுத்து வாழ்த்திய பாடலொன்று புறநானூற்றிற் கடவுள் வாழ்த்தினையடுத்து முதலாவதாகத் தொகுக்கப்பெற்றுள்ளது.