Continuation of Issue 5 …
Tolkappiyam and Sangam Literature
period, the plural of s was given only in Afrikan. Kallotu civanu mavviyar name , kolvali’s palavari corke , the fact that the formula pulanam. Puriya ( 919), others ( 263) that tirukkuralilum , titutir better quintet of nilaipola (kali 26) as the denominator kalittokaiyilum uyartinaip peyaraiyatuttuk’s fate has not been studied in tolkappiyat offers. Tolkappiyar defined Uriyadh as a Vikudhi man. On the contrary, the euphoria of the rappanna rakkalum yarmukkum, in a nullity.
இதழ் 5இன் தொடர்ச்சி…
தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்
தொல்காப்பிய விதிக்கு மாறான சொல்வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நுல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்தில் கள் என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியது. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே, கொள்வழி யுடைய பலவறி சொற்கே, என வரும் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனாம். பூரியர்கள் (919), மற்றையவர்கள் (263) எனத் திருக்குறளிலும், தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல (கலி-26) எனக் கலித்தொகையிலும் உயர்திணைப் பெயரையடுத்துக் கள் விகுதி பயின்று வழங்குவதற்குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்படவில்லை. அன் விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே யுரியதெனத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். இவ்விதிக்கு மாறாக இரப்பன் இரப்பாரை யெல்லாம் என வருந் திருக்குறளில் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்குகின்றது.