ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தொடக்ககாலத் தமிழ்ச்சிறுகதை

Early Tamil Short Story

Article Authors

Full Text

share it

Abstract (English):

Writer su.Venugopal presents a new concept and explores the history of Tamil short stories.  He discussed the storytelling methods of Puthumaipithan, Ku.pa.Rakopalan, ka.na.Subramaniam and P.S. Ramaiah. This article examines the trend of short stories in the 1930s in particular.

Abstract (Tamil):

தமிழ்ச்சிறுகதைக்குக் கனமான வரலாறு ஒன்று உருவாகிவிட்டது. பிற உலகமொழிகளில் எவற்றுடனும் ஒப்பிடத்தகுந்த உயர்ந்த இடத்தில் தமிழ்ச்சிறுகதை உலகம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. தமிழ்ச்சிறுகதைக்கு  வலுவான அடித்தளத்தை 1933வாக்கில் மணிக்கொடி இதழ் உருவாக்கித் தந்தது. இதன்வழி இலக்கியப் பிரவேசம் செய்த இளைஞர்கள் தமிழ்ச்சிறுகதையின் முகத்தையே முற்றிலும் மாற்றி அமைத்தனர். வடிவம் சார்ந்தும் பொருள் சார்ந்தும் இவர்கள் தனித்துவமான புதியபாதைகளை உண்டாக்கினர். அதுவரை எழுதப்பட்ட உலகச் சிறுகதைகளை ஆழ்ந்து கற்றதின் வழி அசலான தமிழ்ச்சிறுகதையின் தோற்றுவாய்களாக இவர்கள் நின்றனர்.

புதிய இலக்கியப் போக்கைக் கச்சிதமான வடிவில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா நிலைநாட்டினர். என்றாலும் இவர்களினும் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னமே இந்தப் புதிய இலக்கியப் போக்கைத் துளிர்க்கச் செய்தவர்கள் உண்டு. இவ்விலக்கிய வடிவத்தைக் கையாண்டு செம்மை நோக்கி நகர்த்தி நகர்த்தி வந்திருக்கின்றனர். கைமாறு கருதா அவர்களின் பங்கு பணி என்றென்றும் மதிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. அவர்களை மீளக் கொண்டு வந்து வரலாற்றின் முன் வைக்க விரும்புகிறது இக்கட்டுரை.

Keywords

தமிழ், சிறுகதை, வரலாறு, தனித்துவம், தோற்றுவாய்.

references

…………., கதை அரங்கம் -1 , மீனாட்சி புத்தக நிலையம் ,மதுரை .முதற்பதிப்பு : 1961
Dilipkumar , (Ed.) The Tamil Story ,Tranquebar Press by Westland Ltd, 2016
அரசு வீ., (பதி.), இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு, அடையாளம் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு :2012
சந்திரகாந்தன்(தொ.ஆ.), இருபதாம் நூற்றாண்டின் சில தமிழ்ச்சிறுகதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம் , சென்னை .2000
சிட்டி, அசோகமித்திரன், முத்துக்குமாரசாமி (தொ.ஆ.), மணிக்கொடி இதழ்த் தொகுப்பு , கலைஞன் பதிப்பகம், சென்னை. 2001
செல்லப்பா சி.சு . ,தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது , காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் .2007
திருநாவுக்கரசு க., திராவிட இயக்கச் சிறுகதைகள், ஸ்ரீ சரவணா பானு பதிப்பகம், சென்னை . 2007
விட்டல் ராவ் (தொ.ஆ..),சிறந்த தமிழ்ச் சிறுகதைகள், கலைஞன் பதிப்பகம் , சென்னை .2000
வெண்ணிலா அ .(தொ.), மீதமிருக்கும் சொற்கள் , நியூ சென்சுரி புக் ஹவுஸ் , சென்னை. 2007

citation

No citation data found.

Sign In

Author access is disabled