Ancient Tamil literature one pls ancient manuscripts written study taught came . Palm-leaf elutummuraikal the the problems are numerous . In writing the advent of typography ; Spreading versatility in teaching . G . P .1554 in Portugal ilispan in Roman letters printed luco Tamil question, the answer is that the Norwegian’s first printed treatise known . Its pinnart Tamil literature printed the first book, pls is the Indexation . The book was printed in 1812 . This article describes the news about the editor.
பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகிய திருக்குறள் பழங்காலத்தில் சுவடிகளில் எழுதப்பட்டுக் கற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. பனையோலை எழுதும்முறைகளில் இருந்த சிக்கல்கள் எண்ணற்றவை. அச்சுக்கலையின் வருகை எழுதுவதில்; கற்பிப்பதில் பலவசதிகளைப் பரப்பியது. கி.பி.1554இல் போர்ச்சுகலில் இலிஸ்பன் நகரில் ரோமன் எழுத்துக்களில் அச்சிடப்பட்ட லூசோ தமிழ் வினா விடை என்பதே தமிழின் முதல் அச்சு நூலாகும் என்பர். அதன் பின்னர்த் தமிழ் இலக்கியங்களில் அச்சான முதல் நூல் திருக்குறள் ஆகும் என்ப. அந்நூல் 1812இல் அச்சானது. அப்பதிப்பின் பதிப்பாசிரியர் பற்றிய செய்திகளை எடுத்துரைப்பது இக்கட்டுரை.