ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தமிழ்மொழி கற்பித்தல்: சிக்கல்களும் சில வழிமுறைகளும்

Teaching Tamil: Problems and some instructions

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

In the twenty-first century as a technological century, there has been much debate around the need for the mother tongue. It is in this context that this essay examines the basic language knowledge of Tamil language students. This paper describes how the media participated in the development of language based on data collected from a field survey of 100 students studying Tamil as a language subject for this study.

Abstract (Tamil):

தொழில்நுட்பவியல் நூற்றாண்டாகப் போற்றப்படும் இருபத்தோராம் நூற்றாண்டில் பொதுவாக உலகம் முழுவதும்  தாய்மொழியின் தேவையைக் குறித்துப் பல விவாதங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்திய மொழிகளுள் தமிழ்மொழி மிகத் தொன்மையும் முதன்மையும் கொண்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக்கொள்கை இருந்தாலும், விருப்பமொழியாகப் பிற மொழிகளைப் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொழி அறிவில் அதிலும் தாய்மொழி அறிவில்  நிறைவாக இருக்கும்போதுதான் பிற மொழியையும் பிற பாடங்களையும் கசடறக் கற்க இயலும் என்பது இன்றைய புதிய கல்விக்கொள்கையை வழங்கிய ஹர்லாக் அவர்களின் கருத்து.

“தமிழ் இனி மெல்லச் சாகும்” என்ற பாரதியின் கூற்று மிக விரைவில் தமிழகத்தில் நடைபெற்றுவிடுமோ என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓர் இனத்தை அழிக்க நினைத்தால் அந்த இனத்தின் தாய்மொழியை அழித்து விட்டால் இனம் தானாக அழிந்து விடும் என்பது காலத்தின் உண்மை. இதையெல்லாம் தாண்டி நில்லா இயக்கங்கொண்டது தமிழ்மொழியாகும்.

இந்த இயக்கம் தொடர்ந்து நிகழவேண்டும் என்றால் அடுத்த தலைமுறையினரிடமும் தாய்மொழியான தமிழ்மொழியின் பற்றினையும் ஈர்ப்பினையும் உருவாக்க வேண்டும். இவ்வாய்வுக் கட்டுரை தமிழ்பேசும் மாணவர்களின் தாய்மொழியில் அவர்களுக்கு இருக்கும் அடிப்படை மொழி அறிவை ஆராய்வதாக அமைகின்றது. இந்த ஆய்விற்காக மொழிப்பாடமாகத் தமிழைப் பயிலும் 100 மாணவர்களிடம் தரவுகள் கள ஆய்வின் மூலம் சேகரிக்கப்பட்டு அத்தரவுகளின் அடிப்படையிலும் ஊடகங்கள் எந்த அளவிற்கு மொழி வளர்ச்சியில் பங்கெடுக்கின்றன என்பதையும் இணைத்து இவ்வாய்வுக் கட்டுரை தன் ஆய்வுப்போக்கினைச் செலுத்துகின்றது.

Keywords

தொழில்நுட்பவியல், தமிழ்மொழி, கற்பித்தல், சிக்கல், தாய்மொழி

references

• கவிதா கெள., 2007, தமிழ்வழிக் கற்றல் – கற்பித்தல் புதிய உத்திகள். (மொழி) (க) (தொ.4) கலைஞன் பதிப்பகம். சென்னை.
• தமிழரசி சுப்பிரமணியம், 2015, மாணவர்களின் படித்துணர்திறன் : சிக்கல்களும் தீர்வுகளும் (ஆய்வேடு), தமிழ் இலக்கியத்துறை. சென்னை.
• பரஞ்சோதி இரா., 2007, தமிழ்வழிக் கற்றல் – கற்பித்தல் வளர அரசின் பங்கு, (க)(தொ.3), கலைஞன் பதிப்பகம். சென்னை.
• புகழ்ச்செல்வி இரா., 2007, தமிழ்வழிக் கற்றல் – கற்பித்தலில் புதிய உத்திகள் -ஊடகம் (க)(தொ.3) கலைஞன் பதிப்பகம். சென்னை.
• முத்தையா ஆத.(ப.ஆ), 2003, உலகத் தமிழியல் ஆய்வு வளர்ச்சிக் கருத்தரங்க ஆய்வு மாலை.(தொ.1), ஏவிவி கல்லூரி. பூண்டி.
• …………., தமிழிலக்கிய வகைமையியல். (தொ.2). 2005. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.
• ……………, தமிழ்வழிக் கற்றல்–கற்பித்தல் புதிய உத்திகள், 2007 1.2.3.4.தொகுதிகள். கலைஞன் பதிப்பகம். சென்னை.

citation

No citation data found.

Sign In

Author access is disabled