The paper itself that objective to evaluate of Dr. V.S.Kulanthai sami in the line of his research work entitled vāḻum vaḷḷuvam, The work was written by him, who was one of the best Tamil scholar and professor. This paper to shows that the thirukkural, it is ancient Tamil, is the of the best ethical, moral, secular and universality work.
உலகில் தோன்றிய மொழிகளுள் காலத்தால் முற்பட்டது தமிழ்மொழி. இம்மொழி எண்ணிறந்த நூல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் உலக நூல்கள் எவற்றுடனும் ஒப்பிட முடியாத தன்மை பெற்றது திருக்குறள். நூற்றாண்டுகள் பல கழிந்த பின்பும் பல சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டும் இன்றும் நம்முடன் வாழ்ந்து நமக்காக அறிவுரை கூறும் சான்றோர் ஒருவரின் தெளிந்த வாய்மொழி போல் விளங்குகிறது. திருக்குறளைத் திறனாய்வு செய்தோர் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வா. செ. குழந்தைசாமி. இவர் எழுதிய திருக்குறள் சார்ந்த திறனாய்வு நூல் வாழும் வள்ளுவம் ஆகும். இந்நூல் இந்திய அரசால் வழங்கப்படும் சாகித்திய அகாதமி (1988) விருதினைப் பெற்றுள்ளது. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு வா.செ.குழந்தை சாமி அவர்களின் கருத்துகளை இக்கட்டுரை மதிப்பீடு செய்கின்றது.
வா. செ. குழந்தைசாமி, (1987), வாழும் வள்ளுவம், சென்னை: பாரதி பதிப்பகம்.
பரிமேலழகர் உரை, (2011), திருக்குறள், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.