ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

சோழர்கால வடமொழிக் கல்லூரிகள்

SANSKRIT COLLEGES IN CHOLA PERIOD

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

Cholas were ancient Tamil rulers whom ruled the Chola country. They were ardent supporters of Education. They established many Sanskrit colleges in various parts of Tamil Nadu. In these colleges various Sanskrit and Vedic literature and grammar were taught for the students. The college itself provide free food, dress and shelter. It was donate by the kings to the colleges in the ways of lands and villages. The teachers in the institution has got good package. The lands donated for them called as Pattaviruthi. lands. This college’s official language was Sanskrit. Only Barahmin student were allowed to join in the colleges. These colleges were fully supported by the Chola kings. It improves the educational condition in the Chola country.

Abstract (Tamil):

சோழர் காலம் தமிழகத்தின் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற காலமாகும். அரசியில், சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம்  என்று எல்லாத் துறைகளிலும் தமிழகம் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர் வளர்ச்சியை எட்டியது. சோழ மன்னர்கள் கலை இலக்கியப் புரவலர்கள் என்பதற்கு அவர்கள் விட்டுச் சென்ற கலைப் படைப்புகளே சாலச் சிறந்த சான்றுகள். அவர்கள் காலத்தில் தோன்றிய உயர் இலக்கியப் படைப்புகளைக் காணும்பொழுது கல்வியின் வளர்ச்சியின்றி இவை ஏற்பட்டிருக்காது என்பது உறுதி. ஆனால் தம்முடைய சாதனைகளைப் பின்வரும் தலைமுறைகள் அறிய வேண்டும் என்பதற்காக அவற்றைக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதியச் செய்துவிட்டுச் சென்ற சோழர்கள் தம் காலத்தைச் சார்ந்த ஒரு தமிழ்க்கல்வி நிறுவனத்தையும் சுட்டிச் செல்லாதது வியப்பானவொன்று. அவ்வாறு அவர்கள் சுட்டாத பொழுது அவ்வகைக் கல்லூரிகள் தமிழகத்தில் செயல்படவில்லை என்றே கொள்ள வேண்டும்.

அதேசமயம் வடமொழிக் கல்வியை ஆதரித்தும், அது சார்ந்த கல்வி நிறுவனங்களைப் பற்றியும் தவறாமல் பதிவு செய்து சென்றுள்ளனர். இதனைச் சோழர் காலத்தில் நிலவிய வடமொழியின் ஆதிக்கத்தைப் புலப்படுத்தும் செய்தியாகவே பார்க்க வேண்டும். ஆண்டவர்கள் தமிழர்கள், ஆளப்பட்டவர்கள் தமிழர்கள், ஆனால் அவர்களின் தாய்மொழியில் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தாமல் அந்நிய மொழியில், அதுவும் சிறுபான்மையினர் பேசும் மொழியில் கல்லூரிகள் நிறுவியது மிகவும் வியப்பிற்குரியது. வடமொழிக் கல்விக்கும், கல்லூரிகளுக்கும் சோழ மன்னர்கள் வழங்கிய தாராள ஆதரவினைக் காணும்பொழுது அக்காலத்தில் தமிழ்க்கல்வி எந்த அளவுக்குப் பின்தங்கி இருந்தது என்பது புலப்படும். கடந்த நூற்றாண்டு வரை தமிழ்க்கல்வியின் பின் தங்கிய நிலையைக் கூற இதைவிட வேறு சான்று இல. சோழ மன்னர்களின் ஆதரவில் வடமொழி நன்கு வளர்ந்ததுடன், வேதக் கல்லூரிகளும் புகழ்பெற்று விளங்கின.

Keywords

Educational Institutions, Sanskrit, வடமொழிக் கல்வி, கல்வி வளர்ச்சி, சோழ அரசு.

references

No reference data found.

citation

No citation data found.

Sign In

Author access is disabled