Manitattuva arivupparap the dialectic of thought and traditions of the old in the dock , correspondingly, literary and externally itself a work happens . Geography , astronomy , botany , zoology , ornithology , ecology such as the modern scientific development and literature yield the budding coming this time, the ecology -oriented concepts, ‘ the earth Save ‘ the extent of the mature stand . So the ecological literature, human life and the external environment and the comprehensive level of exploring are . This is why today , in the period purantallamutiyata as one of literature outside the front to the back stand . Currucculalait tuymaiyakap maintain protection for the awareness of today’s camukattaritaiye completely occur cankakalac community found that the association of literary texts amounts song emphasized . Among some of the concepts only etuttiyampa article attempts have been undertaken .
மனிதத்துவ அறிவுப்பரப்பில் இயங்கியல் சார்ந்த சிந்தனை மரபுகள் முதிர்ந்து நிற்கும்போது அதற்கேற்ப இலக்கிய வெளியும் தன்னளவில் செயலாற்ற நேர்கிறது. புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், பறவையியல், சுற்றுச்சூழலியல் என்பன போன்ற தற்கால அறிவியல் வளர்ச்சி இலக்கிய விளைச்சலாக அரும்பி வரும் இக்காலக்கட்டத்தில் சூழலியல் சார்ந்த கருத்தாக்கங்கள் ‘இந்தப் பூமியைக் காப்போம்’ என்ற அளவிற்கு முதிர்ந்து நிற்கின்றன. எனவே சூழலியல் இலக்கியங்கள் மனித வாழ்வோடு தொடர்புடைய புறச்சூழல்கள் குறித்து விரிவான அளவில் ஆராய்ந்து வருகின்றன. இதன் காரணமாகவே இன்றைய காலக்கட்டத்தில் புறந்தள்ளமுடியாத ஒன்றாக இலக்கிய வெளியில் அவை முன்னுக்கு வந்து நிற்கின்றன. சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேணிக் காத்தலுக்கான விழிப்புணர்வு இன்றைய சமூகத்தாரிடையே முழுமையாகக் காணப்படாவிட்டாலும் சங்ககாலச் சமூகத்தில் காணப்பட்டன என்பதைச் சங்க இலக்கிய நூல்களான தொகையும் பாட்டும் எடுத்தியம்புகின்றன. அவற்றுள் சில கருத்தாக்கங்களை மட்டும் எடுத்தியம்ப இக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.