Silappathikaram is the most prominent among the five great epics of Tamil literature. In that Epic the place Madurai was mentioned. That is the reason why the place derived the name of Madurai. The evidence of Tamil sangam, the famous Vaigai Rivers, Several fertile/ important streets where different things are sold, the richness of the people and the minute works carried out by them are the aspects revealed in this essay.
பெருங்காப்பியங்களுள் முதன்மையானது சிலப்பதிகாரம். கண்ணகியின் சிறப்பினை உலகிற்குப் பறைசாற்றிய அருங்காப்பியம். முத்தமிழின் பெருமைகளையும் மூவேந்தர்களின் மாண்புகளையும் வானுயர விரித்துச் சொல்லும் வளமார்ந்த காப்பியம். மூன்று காண்டங்கள், முப்பது காதைகள் என்ற வகைப்பாட்டின்கீழ்ச் சிலம்பின் கதை விரிந்து செல்கின்றது. இச்சிலம்புச் செல்வத்துள் உரைக்கப்பட்டுள்ள மதுரை நகரின் பன்முகச் சிறப்பினை இக்கட்டுரை ஆராய முனைகின்றது.