Bharat throughout the paktimarkkam over the years and was becoming . Among devotion and spirituality iruperun turuvankalakat emerged . In Assam Shankara , Bengal srikirusna Chaitanya venerable nijakuna carvayoki , tontata cittalinkesvarar , Karnataka purantaratacar such Spirituality bud of those notables . In the same period men, communalism , caste differences , untouchability , hope, devoid of rituals , superstitions etc. kanalayina . These events are what happened a first-hand look at the populations scattered lying ignorance , promiscuity ponravarrinaip that he ururakac round dropped carvaknar . His life history, this article presents .
பாரதம் முழுவதும் பக்திமார்க்கம் பன்னெடுங்காலமாக விளங்கி வருகிறது. மக்களிடையே பக்தியும் ஆன்மீகமும் இருபெருந் துருவங்களாகத் தலையெடுத்தன. அசாமில் சங்கரர், வங்காளத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகான் நிஜகுண சர்வயோகி, தொண்டாட சித்தலிங்கேஷ்வரர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றோர் ஆன்மீகத்தைத் துளிர்க்கச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதேகாலத்தில் மனிதர்களிடையே வகுப்புவாதம், சாதி வேறுபாடு, தீண்டாமை, நம்பிக்கை அற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள் போன்றவையும் காணலாயின. இந்நிகழ்வுகள் நடந்தவற்றைக் கண்கூடாகப் பார்த்து மக்களிடையே சிதறிக் கிடந்த அறியாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றினைப் போக்குவதற்காக ஊர்ஊராகச் சுற்றித் திரிந்தவர் சர்வக்ஞர். அவரின் வாழ்க்கை வரலாற்றை இக்கட்டுரை முன்வைக்கிறது.