Tolkappiyam (6 BC) fully internalized grammar of individual theory. Language Researchers say that the book is based on the availability of Tamil language. Thus, in the grammatical sense, this paper attempts to explain the unique character of the particle structure using the methodology of the system.
தொல்காப்பியம் (கி.மு.6) தனிநிலைக் கோட்பாட்டை முழுமையாகக் கொண்டிருக்கும் இலக்கணமாகும். தமிழில் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அமைந்த இவ்விலக்கண நூலை இன்னும் சரியாக யாரும் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று அந்நூலை மொழியியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் [ (பாலசுப்பிரமணியன் க., 2017) (பாலசுப்பிரமணியன் க., 2015) (சண்முகம் செ.வை., 1992)]. எனவே, இலக்கணவியல் நோக்கில் அவ்விலக்கணப் பனுவலின் தனிநிலைப் பண்பை உவமவியல் அமைப்பு முறையைக் கொண்டு இக்கட்டுரை விளக்க முயலுகின்றது.