The text is a description of the original songs. And the text is an art of opening the source. Text writers are the main reason why Tamil literature is celebrated today. Text legacy is an ongoing process. Here the function refers to text. Thus, consensus protocols associated with the work of lecturers can be referred to as the textbook. It is correct to call his norms a textbook. It was practiced centuries and even today by ancestors. This is how C. Balasundaranar’s Tolkappiya internal text is examined.
தொடக்ககாலத் தமிழிலக்கிய, இலக்கணங்கள் செய்யுள் வடிவிலேயே அமைக்கப்பட்டன. படைப்பவனுக்கும் கேட்பவனுக்கும் இடைவெளி என்பது இல்லாத காலம். எனவே, பிரதியைப் படைத்தலும் வாசித்தலும் தடையின்றி நடைபெற்றது. காலமும் சூழலும் மொழியினூடாகப் படைப்பாளனுக்கும் வாசிப்பாளனுக்கும் இடையே ஓர் இடைவெளியை உண்டாக்கின. சொல் வழக்கின்மை, பொருள் விளங்காமை போன்றவை அவ்விடைவெளிக்குக் காரணமாயின. இத்தகு இடைவெளியை இட்டு நிரப்புதற்கு எழுந்தவையே உரைகளாகும். எக்காலத்தோ ஆக்கப்பட்ட பிரதியைப் பல நூற்றாண்டுகள் கடந்தும் சமகால வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் அரும்பணிகளைச் செய்தவர்கள் உரைகாரர்களாவர். உரைகாரர்கள் இல்லையெனின் பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் இருள்சூழ்ந்த தரவுகளேயாகும். அவற்றைக் கண்டுணர ஒளிவிளக்காய்த் துணை நிற்பன உரைகளேயாகும்.