The paper deals the subject to make the bibliography of the various editions, publications, and commentaries of Iraiyanar Akapporul, the classical text of Tamil literature. In the point of view the paper take the various editions of this text since the beginning of the printing technology for the bibliography of the text.
தமிழில் எண்ணற்ற படைப்புகளும் ஆய்வுகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் காணாமற் போனவும் பல. வெளிவந்த, வந்தனவற்றை அடைவு செய்யும் போக்குத் தமிழில் இன்னும் வளர்ச்சிபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் செயற் படுத்தப்பட்டும் வருகின்றன. அத்தகு முயற்சியிற் சிறுதுளிப் பங்களிப்பாக, இறையனார் களவியல் உரை எனும் இறையனார் அகப்பொருளிற்கு எழுந்துள்ள பதிப்புகள், வெளியீடுகள், ஆகியவற்றை அடைவு செய்யும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.