ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

இராமர் அம்மானை ஓர் ஆய்வு

A Study of Ramar Ammani

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

One of the Indian epics, the Ramayana, is sung in the Valmiki in Sanskrit and Kambar in Tamil. “Ramar Ammani” is created in keeping with the theme of the poets of the two great poets. The theme of the epic Ramayana sung in the Valmiki Sanskrit is known to vary somewhat in the Kambarayana. It is in this context that Rama Ammani, which has been created in some instances, differs in some respects. The purpose of this article is to study the Rama Amman.

Abstract (Tamil):

பண்பாட்டுத்தளத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இராமாயணம் ஒரு செவ்வியல் இலக்கியமாகும். இராம – இராவண யுத்தத்தினைப் பிரதிபலித்து நிற்கின்ற கம்பராமாயணத்தினை வான்மீகி வடமொழியிலும் கம்பர் தமிழ்மொழியிலும் பாடியிருக்கின்றனர். இந்த இருபெரும் கவிஞர்களின் பார்வையில் பதிந்த கருப்பொருளினை அடியொற்றி இராமர் அம்மானை படைக்கப்பட்டிருக்கின்றது. வான்மீகி வடமொழியில் பாடிய இராமாயணத்தின் கருப்பொருள் கம்பராமாயணத்தில் சில இடங்களில் மாறுபட்டுச் செல்வதனை அறியமுடிகின்றது. இந்தப் பின்னணியில் படைக்கப்பட்டிருக்கும் இராமர் அம்மானையும் புலவருடைய இலக்கியச் சுவைக்கு ஏற்பவும் வாசிப்பவரின் உணர்வைத் தூண்டும் வகையிலும் கேட்பவரை மனஞ்சலிக்காத வகையில் கொண்டுசெல்லும் உணர்வுடனும் ஆங்காங்கே சொற்கோர்ப்புகளை கருப்பொருள் மாறாதவகையில் புலவர் முன்வைத்துப் பாடியுள்ளார். இந்த மாற்றம் இராமர் அம்மானையின் வெற்றிக்கான காரணமாக அமைகின்றது. இராமாயணத்தில் வரும் பாத்திரங்களின்வழி முன்கொண்டு செல்லப்படும் இராமர் அம்மானை” அம்மானை என்ற மரபு அடிப்படையில் பின்பற்றப்பட்டுவரும் வரைவிலக்கணத்துக்குச் சற்று மாறுபட்ட விதத்தில் செல்கின்றது. இந்த மாற்றம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் எழுந்த அனைத்து அம்மானைகளுக்கும் பொதுவானதே. இராமர் அம்மானை கம்பராமாயணத்தில் இருந்து விலகிச் செல்லாவண்ணம் கிளைக் கதைகளுடனும் சில மாறுதல்களுடனும் வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் இந்த ஆய்வுக் கட்டுரையில் அடையாளப் படுத்தப்படுகின்றது.

Keywords

இராமர் அம்மானை, ஓலைச்சுவடி, இராமர், கருப்பொருள், Kambarayana, Ramar Ammani

references

• கணபதிப்பிள்ளை சி. (1965), கம்பராமாயணக் காட்சி, சுன்னாகம் திருமகள் அழுத்தகம்.
• கமலநாதன் சா.இ. (2002), பாரத அம்மானை, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
• கோபாலன் வெ. (வி.தெ.), உரைநடையில் கம்பராமாயணம், மின்னூலாக்கம்.
• சீனிவாசன் ரா. (2015), கம்பராமாயணம் (உரைநடை) தமிழ் விக்கிப்பீடியா.
• இராமர் அம்மானை ஓலைச்சுவடி.

citation

No citation data found.

Sign In

Author access is disabled