When I met the scholar, I met him four times. Prelude ( March 2009 ). Third view ( December , 2012 ) at the University of Coimbatore – Karpagam. Fourth Scene ( December , 2012 ) Scholarly anniversary (up to his lifetime) seminar held at his residence in association with Tamilayakam. In all three cases, scholars The Festival Man! .. I Was the Spectator! Place of occurrence – World Tamil Education Movement , Tamil Nadu .
முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் பல்வேறு கருத்தரங்கநிகழ்வுகளுக்குச் செல்லும்போது தமிழன்பர்கள்வழியும் என் பேராசிரியர்வழியும் தமிழறிஞர் ச.வே.சு.வின் ஆளுமையைப் பற்றிக் கூறக் கேட்டு அறிந்த நான், நேரில் கண்டு உணர்ந்த ஆளுமைத்திறத்தை மட்டும் இவ்வுரையின்வழி வெளிப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.
அறிஞர் பெருமகனாரை நான் நேரில் கண்டதோ முத்தாய்ப்பாக நான்கு முறைதாம். முதற்காட்சி (2009, மார்ச்) உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில். மூன்றாம் காட்சி (2012, திசம்பர்) கோவை – கற்பகம் பல்கலைக்கழகத்தில். நான்காம் காட்சி (2012, திசம்பர்) அறிஞர் ஆண்டுதோறும் (தன் வாழ்நாள் வரை) மெய்யப்பன் தமிழாய்வகத்துடன் இணைந்து தன் இல்லத்தில் நிகழ்த்திய கருத்தரங்கில். இம்மூன்று நிகழ்விலும் அறிஞர் ச.வே.சு. விழா நாயகராய்!.. நான் பார்வையாளனாய்!.. இடைப்பட்ட இரண்டாம் காட்சியே அறிஞரின் ஆளுமையை அருகிலிருந்து கண்டுணரச் செய்தது. நிகழ்ந்த இடம் – உலகத் தமிழ்க்கல்வி இயக்கம், தமிழூர்.