The paper it has objective that the describes about the life and works of Manavai Mustafa. The paper indicates that his birth, education, and life history briefly. He was renown to bestow the ‘Father of Tamil Science’ award for his science thoughts in Tamil. His works technical terms and bibliography are to be nationalized to enclose the paper.
இவ்வுலகின் மிகத்தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. இயற்கையான இலக்கிய வளமும் இலக்கணச் செழுமையும் மிகுந்த தமிழ்மொழியானது, பல்வேறு மொழிகளுக்குத் தாயாகவும் விளங்குகிறது. மண்ணில் ஆங்காங்கே மனித இனக்குழுக்கள் உருவாகச் சிந்திக்கப் பழகும் முன்பே, தமிழர்கள் தங்கள் மொழியால் இவ்வையகத்தின் வாழ் வனுபவங்களைக் கல்வெட்டிலும் ஏடுகளிலும் எழுதியவர்கள். மண்ணுலகில் தாம் கண்ட மகாசக்திகளை ஓவியங்களால், எழுத்துகளால், வார்த்தைகளால் கருத் துரைக்கத் தொடங்கினார்கள். எனவேதான், உலக மொழி வல்லுநர்கள் எல்லாம் ஆதித்தமிழின் ஆழத்தையும், அதன் அற்புதத்தையும் கண்டு சிலாகித்துக் கொள்கின்றனர். கடந்துவந்த நம் அளப்பரிய கால கட்டத்தின் அரிய பெரிய வரலாறுகளையும், அதன் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறைகள் அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமானதாகும். ஏனெனில், இக்காலத் தமிழர்கள் தங்கள் காலச்சுவடுகளை மறந்து பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மருத்துவமோ, பொறியியலோ, அறிவியலோ படிக்கத் தகுதியற்ற மொழி என்று தம் தாய்மொழியைப் புறந்தள்ளி விட்டு வேறு திசையில் தங்கள் கவனத்தையும் பயணத்தையும் செலுத்தத் துவங்கி விட்டனர். தடம்மாறும் இன்றைய தமிழர்களின் அறிவிற்கு எட்டும் வகையிலும், இளைய தலைமுறை யினருக்குத் தகுந்தவாறு காலத்தின் தேவையறிந்து தமிழின் அறிவியல் சிறப்பையும், செழுமையையும் வெளிக்கொண்டு வருவதிலேயே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மறைந்த தமிழறிஞர் ‘மணவை முஸ்தபா’ அவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது பின்வரும் தேடலும் திரட்டலும்.
மணவை முஸ்தபா., 1997, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை பதிப்பகம், சென்னை.
மணவை முஸ்தபா., …., தமிழர்களின் வாழ்வில் மொழியில் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம், கருத்தரங்கச் சிறப்பு மலர்.